கொரோனாவை எதிர்த்து பணிபுரியும் தமிழக காவலர்களில் 7,800 பேர் பாதிப்பு; 26 பேர் உயிரிழப்பு!

Filed under: தமிழகம் |

உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா தொற்று இந்தியாவில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரசால் மகாராஷ்டிரா, ஆந்திரா பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 9 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸை எதிர்த்து களப் பணிகளில் ஈடுபடும் காவலர்களில் இதுவரை 7,800 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில், சென்னை காவல்துறையில் நேற்று ஒரே நாளில் 17 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இதுவரை 2,572 காவலர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இதுவரை 2,324 பேர் குணமடைந்து பணிக்கு திரும்பினர்.

தற்போது இன்று தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தின் காவல் உதவி ஆய்வாளர் பாபு கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிக்சை பலனில்லாமல் உயிரிழந்தார். இவர் கடந்த மூன்றாம் தேதி அமைந்தகரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இவரையும் சேர்த்து 26 இதுவரை உயிழந்துள்ளனர்.