வீட்டிலேயே கள்ளச்சாராயம் காய்ச்சிய பெண்!

Filed under: தமிழகம் |

வீட்டிலேயே கேஸ் அடுப்பில் கள்ளச்சாராயம் காய்ச்சியுள்ளார் பெண் ஒருவர். இதை கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு அருகே கள்ளச்சாராயம் குடித்த 17 பேர் பரிதாபமாக உயிரழந்துள்ளனர். கடந்த சில நாட்களாக கள்ளச்சாராய வேட்டை நடந்து வருகிறது. ஆயிரக்கணக்கான கள்ள சாராயம் காய்ச்சும் வியாபாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆரணி அருகே வடுகசாத்து என்ற கிராமத்தில் வீட்டிற்குள் கேஸ் அடுப்பு வைத்து கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த பெண்ணை போலீசார் கண்டுபிடித்தனர். அவரது வீட்டில் இருந்து 100 லிட்டர் சாராயம் போலீசார் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.