வீரமரணமடைந்த தமிழக வீரர்!

Filed under: இந்தியா |

மதுரையைச் சேர்ந்த ராணுவ வீரர் இன்று காஷ்மீரில் இந்திய ராணுவத்திற்கும் பயங்கரவாதிகளுக்குமிடையே நடத்த துப்பாக்கிசூட்டில் மரணமடைந்துள்ளார்.

காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் தர்ஹாலில் இந்திய பாதுகாப்பு படையினர் முகாம் அமைத்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதி வழியாக இருவர் எல்லையை தாண்டி ஊடுறுவியுள்ளனர். அவர்களை நிற்க சொல்லி ராணுவத்தினர் தடுத்தபோது அவர்கள் துப்பாக்கியால் ராணுவத்தினரை நோக்கி சுடத் தொடங்கியுள்ளனர். இதனால் ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் இருவரும் உயிரிழந்துள்ளனர். இந்த துப்பாக்கிச்சூடு சண்டையில் மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இரு ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தீவிரவாதிகளை எதிர்த்து போராடி வீரமரணம் அடைந்த மூன்று ராணுவ வீரர்களில் ஒருவர் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம் புதுப்பட்டியை சேர்ந்த லெக்‌ஷ்மணன் என தகவல்கள் வெளியாகி உள்ளது. நாட்டிற்காக இன்னுயிர் நீத்த அவருக்கு தமிழக மக்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.