வெயிட் எதுவும் முடிந்ததாக அர்த்தம் இல்லை சச்சின் ஓபன் டால்க்!!

Filed under: விளையாட்டு |

போட்டி முடியும் வரை எதுவும் முடிந்ததாக அர்த்தமில்லை’ என்று அடிலெய்டு டெஸ்ட் போட்டி குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியான நாளாக இன்று அமைந்துவிட்டது. வலுவான பேட்டிங் லைன் அப் கொண்ட இந்திய அணி வெறும் 36 அணிக்கு ஆட்டமிழந்து வரலாற்றில் மிகப்பெரிய கறையாக அமைந்துவிட்டது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்தாலும், டி20 தொடரை அசத்தலாக விளையாடி வென்றது.
முதன் இன்னிங்ஸில் இந்திய அணி 244 ரன்கள் எடுக்க பின்னர் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 191 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. இதனால், 53 ரன்கள் முன்னிலை என்ற நம்பிக்கையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது இந்திய அணி.
தொடக்கம் முதலே விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து அதிர்ச்சி அளித்தது. அனைத்து பேட்ஸ்மேன்களும் வருவதும் போவதுமாக இருந்தார்கள். ஒருவர் கூட இரட்டை இலக்கை எட்டவில்லை. இறுதியில் 36 ரன்களுக்கு 9 விக்கெட் இழந்து ஆட்டத்தை டிக்ளேர் செய்தது இந்திய அணி. 90 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணியும் 2 விக்கெட்டுகளை மட்டுமே விட்டுக் கொடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் இந்த படுதோல்வி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் போட்டி குறித்து சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய ட்விட்டரில், ‘முதல் இன்னிங்ஸில் இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு செய்தவிதம் அவர்கள் டிரைவர் சீட்டில் இருப்பதுபோல் (முன்னிலையில்) இருந்தது. ஆனால், இன்று காலை ஆஸ்திரேலிய அணி கடுமையாக போராடி மீண்டுவிட்டது. இதுதான் டெஸ்ட் போட்டியின் அழகு. போட்டி முடியும் வரை எதுவும் முடிந்து விடுவதில்லை. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி தன்னுடைய கிளாஸான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.