உணவு மற்றும் முகக் கவசங்கள் வழங்கிய இந்திய வீரர் முகமது ஷமி – பி.சி.சி.ஐ பாராட்டு!

Filed under: விளையாட்டு |

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் முக கவசங்களை வழங்கினார் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி.

கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. தற்போது இந்தியாவில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கள் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு பிரபலங்கள், நடிகர்கள் விளையாட்டு வீரர்கள் உதவி செய்து வருகின்றனர்.

Mohammed Shami

இந்த சமயத்தில் உத்தரப் பிரதேசத்தின் சஹாஸ்பூர் என்ற பகுதியில் பேருந்தில் வந்த 200 பேருக்கு உணவும் மற்றும் முக கவசங்களும் வழங்கியுள்ளார். தேசிய நெடுஞ்சாலையில் அம்ரரோகா என்ற பகுதியில் டென்ட் அமைத்து அவருக்கும் உணவு மற்றும் குடிநீர் குடிநீர் வழங்கி வருகிறார். மேலும் அவருடைய வீட்டின் அருகே உணவு விநியோக மையமும் அமைத்துள்ளார்.

இதனை பற்றி பிசிசிஐ ட்விட்டர் பதிவில்: உத்தரபிரதேசத்தில் தேசிய நெடுஞ்சாலை உணவு பாக்கெட்டுகள் மற்றும் முககவசங்களை விநியோம் செய்கிறார். சஹாஸ்பூரில் உள்ள அவருடைய வீட்டின் அருகே உணவு விநியோக மையங்களையும் அமைத்துள்ளார் என பிசிசிஐ பாராட்டியுள்ளது.