ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயரின் வேண்டுகோள்!

Filed under: தமிழகம் |

ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் கடவுளை இழிவுபடுத்தி பேசுபவர்களை தண்டிக்க தனி சட்டம் இயற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும் போது, “உலகம் வணங்கும் ராமர், சீதை குறித்து இழிவாக பேசியவரை தமிழக அரசு கைது செய்ய வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்டாள், முருகன் பற்றி அவதூறாக பேசியவர்கள் கூட கைது செய்யப்படவில்லை. ஹிந்து கடவுளை இழிவாக பேசுபவர்களால் தமிழக முதலமைச்சருக்கு தான் கெட்ட பெயர் ஏற்படும். அவ்வாறு பேசுபவர்களை குண்டல் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். கடவுளை இழிவாக பேசுபவர்களை தண்டிக்க தனி சட்டம் கொண்டு வர வேண்டும். உலகளவில் இந்து மதம் குறித்து தவறாக பேசுபவர்களை தண்டிக்கப்பட வேண்டும்” என்றும் அவர் கூறினார்