அமலாக்கத்துறை குறித்து மத்திய அமைச்சரின் விளக்கம்!

மத்திய அமைச்சர் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைக்கு நாடு முழுவதும் செல்ல அதிகாரம் உண்டு என்றும் அவர்கள் யாரை வேண்டுமானாலும் விசாரணை செய்யலாம் என்றும் கூறியுள்ளார்.

தமிழக அரசு சமீபத்தில் தங்கள் அனுமதியை பெற்றே சிபிஐ வழக்கு விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என அரசாணை வெளியிட்டது. அதேபோல் அமலாக்கத்துறை முன்னறிவிப்பு இன்றி சோதனை செய்வதாகவும் சர்ச்சைகள் எழுந்தன. காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் விகே சிங் “சிபிஐ அமலாக்கத்துறைக்கு இந்தியா முழுவதும் செல்ல அதிகாரம் உள்ளது. எங்கெல்லாம் தவறு நடக்கிறதோ அங்கெல்லாம் கட்டாயம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் கூறினார்.