அமெரிக்க அதிபர், துணை அதிபரை சந்திக்கும் பிரதமர் மோடி

Filed under: உலகம் |

வாஷிங்டன், செப் 22:
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிசை சந்தித்துப் பேச உள்ளார்.

இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து, ‘குவாட்’ அமைப்பை உருவாக்கின. இந்த அமைப்பின் மாநாடு அமெரிக்காவில், வரும் 24ம் தேதி நடக்க உள்ளது. இதில் பங்கேற்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்று அமெரிக்காவுக்கு புறப்பட்டுள்ளார்.

இந்த பயணம் குறித்து, பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில்:
அமெரிக்க அதிபர் ஜோ பைடனில் அழைப்பின்பேரில், அமெரிக்காவுக்கு நான் பயணம் மேற்கொண்டுள்ளேன். அதிபர பைடனையும், துணை அதிபர் கமலா ஹாரிசையும் சந்தித்துப் பேச ஆவலுடன் உள்ளேன்.

உலகளவில் நீடிக்கும் பிரச்னைகள் குறித்தும், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவுகளை மேம்படுத்துவது குறித்தும், அவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளேன்.

குவாட் மாநாட்டில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் தலைவர்களுடன் பங்கேற்க உள்ளேன். ஐநா பொதுச் சபையில், சர்வதேச பிரச்சினைகளை எதிர்கொள்வது குறித்து உரை நிகழ்த்த உள்ளேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.