அமெரிக்கா மக்களை கொரோனாவில் இருந்து பாதுகாப்பதில் அதிபர் டிரம்ப் தோல்வி – கமலா ஹாரீஸ் குற்றசாட்டு!

Filed under: உலகம் |

அமெரிக்கா மக்களை கொரோனாவில் இருந்து பாதுகாப்பதில் அதிபர் டிரம்ப் தோல்வி அடைந்துவிட்டார் என துணை அதிபராக போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரீஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

அமெரிக்கா, வாஷிங்டனில் நடந்த விழாவில் பேசிய கமலா ஹாரிஸ், கொரோனா வைரஸை பார்த்து டிரம்ப் பயந்துவிட்டார் எனவும் கொரோனா வைரசால் ஏற்பட்ட பிரச்னையை சரி செய்யாமல் விட்டுவிட்டு பங்கு சந்தையில் கவனம் செலுத்திகிறார் என தெரிவித்தார்.

கொரோனா பிரச்னையில் கவனம் செலுத்தினால் அது பங்கு சந்தைகளில் பாதிப்பை ஏற்படுத்தும், இதனால் தன்னால் மீண்டும் அதிபராக முடியாது என்று டிரம்ப் கருதுகிறார் என்றும் கமலா ஹாரீஸ் விமர்சித்தார்.

இதனால் மீண்டும் டிரம்பால் அதிபராக முடியாது எனவும் கமலா ஹாரீஸ் விமர்சித்தார்.