இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஊரடங்கு அமலில் இருந்தாலும் நாளுக்கு நாள் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. தற்போதைய நிலவரப்படி 5000 முதல் 8000 வரை அதிகரித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை எடுக்கும் நடவடிக்கைகள் எதுவும் முழுதாக பலனளிக்கவில்லை.
இந்நிலையில் இந்தியாவில் மொத்த பாதிப்பு இன்று 2 லட்சத்தைக் கடந்துள்ளது. இன்றைய நிலவரப்படி 2,05,045 ஆக உள்ளது. இந்தியாவில் மிக அதிகமாக மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனாவின் பாதிப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அம்மாநிலத்தில் மட்டும் 72,300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கடுத்த தமிழ்நாட்டில் 25,586 பேர்களும் டெல்லியில் 20,834 பேர்களும் குஜராத்தில் 17,615 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதன் மூலம் இந்தியாவில் உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது என்பது மேலும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.