இந்திய அரசின் கண்டனத்திற்கு ஆளான சீனா!

Filed under: இந்தியா |

சீனாவின் உளவுக்கப்பல் இலங்கை துறைமுகத்திற்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து இந்திய அரசின் கண்டனத்திற்கு உள்ளான சீனாவின் உளவுக்கப்பல் இலங்கை வரவில்லை என்று அந்நாட்டு அரசு உறுதிபடுத்தியுள்ளது.

கடந்த 11ம் தேதியன்று சீனாவின் உளவு கப்பலான யுவான் வாங்க் 5 என்ற கப்பல் இலங்கை அம்பந்தொட்டை துறைமுகத்திற்கு வர இருப்பதாகவும், எரிபொருள் நிரப்புவதற்காக 17ம் தேதி வரை அங்கு நிறுத்தி வைக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் சீன உளவு கப்பலின் இந்த வருகை இந்தியாவை உளவு பார்க்கும் நோக்கில் இருக்கலாம் என்று இந்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்தியாவின் எதிர்ப்பை தொடர்ந்து சீன உளவுக் கப்பலை இலங்கை எல்லைக்குள் அனுமதிக்கப்படவில்லை என்றும், அந்த கப்பல் சர்வதேச கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.