இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம்!

Filed under: இந்தியா,சென்னை |

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நாளை அரசு முறை நிகழ்ச்சிகளுக்காக தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி டாக்டர் பட்டம் வழங்கவுள்ளார்.

நாளை பல்வேறு அரசு நிகழ்ச்சிகளுக்காக தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி. இதற்காக நிகழ்ச்சி ஏற்பாடுகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகின்றது. நாளை திண்டுக்கலில் காந்தி கிராமத்திலுள்ள காந்தி கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். மாணவர்களுக்கு பட்டமளிக்கும் பிரதமர் மோடி அந்த நிகழ்வில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கவுள்ளார். முன்னதாக இளையராஜா மக்களவை கவுரவ எம்.பியாக பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.