உதயநிதி ஸ்டாலினுடன் நடிகர் வடிவேலு சந்திப்பு

Filed under: சினிமா |

சென்னை, செப் 22:
நடிகரும் தி.மு.க., எம்.எல்.ஏ.,வுமான உதயநிதி ஸ்டாலினை நடிகர் வடிவேலு நேற்று சந்தித்துப் பேசினார்.

திமுக ஆதரவாளராக இருந்த நடிகர் வடிவேலு, அதிமுகவை விமர்சித்ததால் அவருக்குப் பட வாய்ப்புகள் பறிபோனதாகவும், பின் இயக்குநர் ஷங்கருக்கும் அவருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனையால், அவருக்கு படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சமீபத்தில் அவருக்கான தடை நீக்கப்பட்டதை தொடர்ந்து, பல ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்த வடிவேலு, சுராஜ் இயக்கக்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார்.

பல ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் சினிமாவில் வடிவேலு நடிக்க உள்ளதால், அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இன்று சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலினை நடிகர் வடிவேலு நேற்று சந்தித்துப் பேசி உள்ளார். ஆழ்வார்பேட்டை இல்லத்தில், இந்த சந்திப்பு நடந்துள்ளது.