ஜனவரி 22ம் தேதி அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து பேருந்துகளிலும் வரும் 22ம் தேதி வரை ராமர் பக்தி பாடல்களை ஒலிபரப்ப வேண்டும் என உத்தரப் பிரதேசம் மாநில போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்படுவதை அடுத்து மாநில போக்குவரத்து துறை இன்று முதல் வரும் 22ம் தேதி முதல் வரை உத்தரப்பிரதேச பேருந்துகளில் ராமர் பக்தி பாடல்களை ஒலிபரப்ப வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் இன்று முதல் 22ம் தேதி வரை உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அனைத்து பேருந்துகளிலும் பக்தி பாடல்கள் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உத்தரவுக்கு பலர் வரவேற்பையும் சிலர் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர்.