உலக சுகாதார மையம் உலகம் முழுதும் ஒரே மாதத்தில் 52% கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் கடந்த சில நாட்களாக புதிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதையடுத்து உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. கடந்த 28 நாட்களில் மட்டும் உலகம் முழுதும் புதிதாக 8.50 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் 3000க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாகவும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 52 சதவீதம் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் மீண்டும் முக கவசம் அணிதல், அடிக்கடி கை கழுவுதல், சானிடைசர் பயன்படுத்துதல் போன்ற கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. கொரோனா மட்டுமின்றி ப்ளூ மற்றும் நிமோனியா போன்ற பாதிப்புகளும் பரவி வருவதாக உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.