அபுதாபி, செப் 27:
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.
ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்டில் இரண்டாம் கட்டமாக நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது.
இதனை அடுத்து 172 என்ற இலக்கை நோக்கி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20வது ஓவரின் கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்து வெற்றி பெற்றது. இதனால் சென்னை அணி புள்ளி பட்டியலில் மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்து 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது.
இதனை அடுத்து 166 என்ற இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணி, 18.1 ஓவர்களில் 111 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 54 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் தோல்வி அடைந்தது.