இன்று அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் இபிஎஸ் என்றால் என்ன? என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சமீபத்தில் அதிமுக பொதுக்குழு நடந்தது. இப்பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இவ்வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. இன்றைய விசாரணையின்போது இருதரப்பு வாதங்களிலும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என்று வழக்கறிஞர்கள் கூறப்பட்டது. அப்போது சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் குறுக்கிட்டு ஓபிஎஸ் இபிஎஸ் என்றால் என்ன? என கேள்வி கேட்டதை அடுத்து ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்தான் ஓபிஎஸ் & இபிஎஸ் என சுருக்கமாக கூறுவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து நீதிபதிகள் விவாதத்தை தொடருமாறு கூறியதாக கூறப்படுகிறது.