காங்கிரஸ் கட்சி மேலிடம் முன்னாள் ஒன்றிய அமைச்சர் கே.வி.தாமஸை கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
மார்க்சிஸ்ட் தேர்தல் பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சருமான கே.வி. தாமஸ்-ம் கலந்து கொண்டது மட்டுமல்லாது அக்கட்சியின் வேட்பாளருக்காக பிரச்சாரம் செய்யப்போவதுமாக அறிவித்திருக்கிறார்.
திருக்காக்கரா இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கூட்டணி வேட்பாளராக டாக்டர் ஜோ ஜோசப் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கொச்சியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் தேர்தல் பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் எல்டிஎஃப் கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான கே.வி. தாமஸ்-ம் கலந்து கொண்டது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கு அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்காக பிரச்சாரம் செய்யப்போவதாக அறிவித்த நிலையில் அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன் தெரிவித்துள்ளார்.