அவுஸ்திரேலியாவுக்கெதிரான ஆறாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தவான், கோஹ்லி அதிரடியாக சதம் விளாச இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா சென்றுள்ள அவுஸ்திரேலிய அணி 7 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில், இந்திய அணி 1-2 என பின்தங்கியது.
நான்காவது, ஐந்தாவது போட்டி மழையால் ரத்து செய்யப்பட, சிக்கல் ஏற்பட்டது. ஆறாவது போட்டி இன்று நாக்பூரில் நடந்தது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணியின் அணித்தலைவர் டோனி களத்தடுப்பை தெரிவு செய்தார்.
இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்களான வினய் குமார், உனத்கத் நீக்கப்பட்டு, அமித் மிஸ்ரா, புவனேஷ்வர் குமார் ஆகியோர் வாய்ப்பு பெற்றனர். அவுஸ்திரேலிய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 350 ஓட்டங்கள் எடுத்தது.
அதிரடியாக விளையாடி சதம் கடந்த வாட்சன் 102 ஓட்டங்களும், அணித்தலைவர் பெய்லி 156 ஓட்டங்களும் எடுத்தனர். ஆட்டமிழக்காமல் வோஜஸ் 44 ஓட்டங்கள் எடுத்தார்.
இதனையடுத்து 351 ஓட்டங்கள் என்ற கடின இலக்குடன் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 49.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு இலக்கை அடைந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
ரோகித் ஷர்மா அரைசதம் கடந்து 79 ஓட்டங்களும், தவான் 100 ஓட்டங்களும் எடுத்தனர். ஆட்டமிழக்காமல் கோஹ்லி சதம் கடந்து 115 ஓட்டங்களும், டோனி 25 ஓட்டங்களும் எடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரை 2-2 என்று சமன் செய்துள்ளது. 7வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வரும் 7ம் திகதி பெங்களூரில் நடைபெற உள்ளது.
கோஹ்லி, தவானின் அதிரடி சதத்தில் இந்திய அணி அசத்தல் வெற்றி |
[ புதன்கிழமை, 30 ஒக்ரோபர் 2013, 05:06.02 பி.ப GMT ] |
![]() நான்காவது, ஐந்தாவது போட்டி மழையால் ரத்து செய்யப்பட, சிக்கல் ஏற்பட்டது. ஆறாவது போட்டி இன்று நாக்பூரில் நடந்தது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணியின் அணித்தலைவர் டோனி களத்தடுப்பை தெரிவு செய்தார். இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்களான வினய் குமார், உனத்கத் நீக்கப்பட்டு, அமித் மிஸ்ரா, புவனேஷ்வர் குமார் ஆகியோர் வாய்ப்பு பெற்றனர். அவுஸ்திரேலிய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 350 ஓட்டங்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடி சதம் கடந்த வாட்சன் 102 ஓட்டங்களும், அணித்தலைவர் பெய்லி 156 ஓட்டங்களும் எடுத்தனர். ஆட்டமிழக்காமல் வோஜஸ் 44 ஓட்டங்கள் எடுத்தார். இதனையடுத்து 351 ஓட்டங்கள் என்ற கடின இலக்குடன் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 49.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு இலக்கை அடைந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. ரோகித் ஷர்மா அரைசதம் கடந்து 79 ஓட்டங்களும், தவான் 100 ஓட்டங்களும் எடுத்தனர். ஆட்டமிழக்காமல் கோஹ்லி சதம் கடந்து 115 ஓட்டங்களும், டோனி 25 ஓட்டங்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரை 2-2 என்று சமன் செய்துள்ளது. 7வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வரும் 7ம் திகதி பெங்களூரில் நடைபெற உள்ளது. |