சென்னை, செப் 22:
‘சந்திரமுகி 2’ படத்தில் நாயகியாக நடிக்க அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பெரும் வரவேற்பைப் பெற்ற ‘சந்திரமுகி’ படத்தின் 2ம் பாகத்தின் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. பி.வாசு இயக்கவுள்ள இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
இந்தப் படத்தில் ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார். இதேபோல், ஜோதிகாவுக்கு பதிலாக நடிக்க, நடிகை அனுஷ்காவிடம் முதலில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எனினும், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அனுஷ்காவிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்தப் படத்தில் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.