சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு பிறப்பித்துள்ள உத்தரவில் கன மழையை எதிர்கொள்ள தயாராக இருங்கள் என அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு புயலாக மாறும் வாய்ப்பு இருப்பதாகவும் எனவே நாளை முதல் சென்னை உள்பட தமிழக கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2015ம் ஆண்டிற்கு பிறகு சென்னைக்கு மிக கனமழை பெய்யும் என்று எதிர்பார்ப்பதால் கனமழை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும் சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் கடந்த மழையின் போது நீர் அதிகம் தேங்கும் இடங்களில் மோட்டார்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி அறிவிப்பு செய்துள்ளது.