பிரதமர் மோடியை அண்ணல் அம்பேத்காருடன் ஒரு புத்தகத்திற்கு எழுதிய அணிந்துரையில் இளையராஜா ஒப்பிட்டு எழுதியது அனைவரின் மத்தியிலும் பேசப்பட்டு வருகிறது.
வரிபாக்கி ரூ.1.87 கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என்று இசைஞானி இளையராஜாவுக்கு ஜிஎஸ்டி ஆணையகரம் இறுதி நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நோட்டீஸ் அவருக்கு மார்ச் 21ம் தேதி புலனாய்வுத்துறையில் இருந்து அனுப்பட்டுள்ளது. அதே காரணங்களைக் குறிப்பிட்டு, மார்ச் 28ம்தேதி காலை 11 மணிக்கு ஜிஎஸ்டி புலனாய்வு அலுவலகத்த்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்தில் ஆஜராக வேண்டுமென சம்மன் அனுப்பட்டு இருந்தது.
வரி ஏய்ப்பு குறித்து விளக்கம் அளிக்கக் கோரி 3 முறை சம்மன் அனுப்பப்பட்டதாக ஜிஎஸ்டி ஆணையகரம் கூறியுள்ளது. 3 சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்காததால், அவருக்கு இறுதி நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.