சென்னை உயர்நீதிமன்றம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகன்நாதன் மீதான வழக்கை விசாரணை செய்ய தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகன்நாதன் மீது சமீபத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கை தடை செய்ய வேண்டும் என துணைவேந்தர் ஜெகன்நாதன் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இம்மனு இன்று விசாரணைக்கு வந்த போது சேலம் பெரியார் பல்கலைகழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கை விசாரிக்க தடை என வழக்கு விசாரணைக்கு தடை விதித்தது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது ஆவணங்களை சரிபார்த்ததில் ஜெகநாதனின் நடவடிக்கைகளில் குற்ற நோக்கம் இருப்பதாக தெரியவில்லை என கூறிய உயர் நீதிமன்ற நீதிபதி, வழக்கை ரத்து செய்ய கோரிய ஜெகநாதன் மனு மீதான விசாரணை 4 வாரங்களுக்கு தள்ளிவைக்கப்படுவதாக தெரிவித்தார். மேலும் தடையை நீக்க வேண்டும் என்றால் தனி மனு தாக்கல் செய்ய காவல்துறைக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.