மீண்டும் கோயம்பேடு மார்க்கெட்டில் 62 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மார்க்கெட் மூடப்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிலும் பரவியது. கொரோனாவால் அங்கு 500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதால் மே 5 ஆம் தேதி மூடப்பட்டது .
இதன் பின்பு மூன்று மாதத்துக்கு மேல் மூடப்பட்டு இருந்து மார்க்கெட் செப் 28 ஆம் தேதி திறக்கப்பட்டது . பொருட்கள் வாங்க வரும் அனைவருக்கும் கொரோனா சோதனை நடத்தப்படுகிறது.
கடந்த 16 நாட்களில் மட்டும் 4200 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதில் 62 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.