டீக்கடையில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 5 பேர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் வானபாடி கிராமத்திலுள்ள செல்வராஜ் (58) என்ற நபருக்குச் சொந்தமான டீக்கடையில் சிலிண்டர் வெடித்தது. இவ்விபத்தில், ஐந்து பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவ்விபத்தில் 5 பேர் காயமடைந்தனர். தற்போது 5 பேர் வாலாஜா பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த திடீர் விபத்து தொடர்பாக சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.