அ.தி.மு.க எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Filed under: தமிழகம் |

கோயம்புத்தூர் மாவட்டம் தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனனுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.

அம்மன் அர்ஜுனனின் மகள் குடும்பத்தினரோடு மதுரை சென்று திரும்பி உள்ளனர். இதன் பின்னர் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் எம்எல்ஏவின் மகள், மருமகன், பேத்தி ஆகிய மூவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவர்கள் மூன்று பேரையும் கோவையில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எம்எல்ஏ மற்றும் மற்றவர்களை தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனனுக்கு இருப்பது உறுதியாகி உள்ளது. அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.