தஞ்சாவூர், செப் 27:
“ஏழு உலக அதிசயங்களை விட, தஞ்சை பெரிய கோவில் அதிக சிறப்புகளை கொண்டது” என மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் தெரிவித்துள்ளார்.
அரசுமுறைப் பயணமாக, மத்திய ஜல்சக்தி மற்றும் உணவு பதப்படுத்துதல் துறை இணை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் தமிழகம் வந்துள்ளார்.
தஞ்சாவூருக்கு நேற்று வந்த பிரகலாத் சிங், இங்குள்ள பெருவுடையார் கோவிலுக்கு சிறப்பு அனுமதி பெற்று சாமி தரிசனம் செய்தார். அங்கு அவர் வராகி அம்மன், பெருவுடையார், பெரியநாகி அம்மன் சன்னதிகளுக்கு சென்று அவர் தரிசனம் செய்து வழிபட்டார்.
பின், செய்தியாளர்களிடம் பேசிய பிரகலாத் சிங் கூறுகையில்:
தஞ்சை பெரிய கோயிலின் சிறப்புகளை, அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பது நமது கடமை. உலகில் உள்ள ஏழு அதிசயங்களை விட அதிக சிறப்பு வாய்ந்தது, இந்த தஞ்சை பெரிய கோயில்.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய அமைச்சரின் இந்த அறிக்கை, தஞ்சை பெரிய கோவிலின் சிறப்பை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது.