மத்திய அரசு எந்தவொரு மாநிலத்தின் மீதும் எந்த மொழியையும் திணிக்காது – மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ட்வீட்!

Filed under: இந்தியா |

புதிய கல்விக் கொள்கை பற்றி மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பகிர்வால் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த ட்விட்டர் பதிவில் அவர் கூறியது: பொன் ராதாகிருஷ்ணன் ஜி, தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கை (NEP)-ஐ நடைமுறைப்படுத்துவதற்கான உங்கள் வழிகாட்டலை எதிர்பார்க்கிறோம். மத்திய அரசு, எந்தவொரு மாநிலத்தின் மீதும் எந்த மொழியையும் திணிக்காது என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.

மேலும், புதிய கல்வி கொள்கை பற்றி பல மாநிலத்தில் எதிர்ப்பு தெரிவிக்கும் சூழலில், மத்திய அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.