4 ஆண்டுகளுக்கு பிறகு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்தில் புத்த மத தலைவர் தலாய் லாமா இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவருக்கு மிக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
புத்த மதத் தலைவர் தலாய் லாமாவுக்கு 80 வயதாகிறது. இவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆனால் தலாய்லாமா வருகைக்கு சீனா எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான ராணுவ கமாண்டர் அளவிலான உயர்மட்ட 16வது சுற்று பேச்சுவார்த்தை இன்னும் சில நாட்களில் நடைபெற்றுள்ள நிலையில் இந்த பயணத்துக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. “இந்தியா சீனா ஆகிய நாடுகள் பேச்சுவார்த்தை மூலம் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க வேண்டும், ராணுவ பலத்தை பயன்படுத்துவது தேவை இல்லாதது” என்று தலாய்லாமா கூறினார்.