தாதர் விரைவு ரயில் விபத்து!

Filed under: இந்தியா |

புதுச்சேரி தாதர் விரைவு ரயில் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது.

நேற்று இரவு மும்பையின் தாதர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட புதுச்சேரி விரைவு ரயில், மாட்டுங்கா ரயில் நிலையம் அருகே விபத்துக்குள்ளானது. ரயிலில் இருந்த 3 பெட்டிகள் தடம் புரண்டதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

 


இந்த விபத்தில் யாரும் காயம் அடையவில்லை என்றும், அனைத்து பயணிகளும் அவர்களது உடமைகளும் பாதுகாப்பாக உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டதையடுத்து தாதர்- புதுச்சேரி விரைவு ரயில் (11005) நாளை ரத்து செய்யப்பட்டது. விபத்துக்குள்ளான தாதர்- புதுச்சேரி விரைவு ரயிலை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன என தெற்கு ரயில்வே தெரிவித்தது.