இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 62.78 சதவீதம் அதிகரிப்பு – சுகாதார அமைச்சகம்!

Filed under: இந்தியா |

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசால் தினதோறும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் இதுவரை எட்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 22 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதில் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

இந்த வைரசால் இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, குஜராத் மாநிலங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 62.78 சதவீதமாக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.