இன்று கேரளாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு பந்த் நடத்த அழைப்ப- விடுத்தது. இதற்கு தானாக முன்வந்து கேரள உயர் நீதிமன்றம் இதற்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளது.
கேரளாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் திடீரென அதிரடி சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனைக்கு பின்னர் சிலர் கைது செய்யப்பட்டதாகவும் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில் சோதனை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் அந்த அமைப்பு முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்தது. இதையடுத்து கேரளாவில் உள்ள பல பகுதிகளில் கடைகள் திறக்கப்படவில்லை. கேரளாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா பந்த் நடத்த அழைப்பு விடுத்ததற்கு அம்மாநில உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கேரளாவில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்களால் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்த கேரள உயர்நீதிமன்றம் இவ்வழக்கை விரைவில் விசாரணை செய்ய உள்ளது.