கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் ஷவர்மா சாப்பிட்ட மாணவி பலியான சம்பவம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதன் எதிரொலியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். அதன் வரிசையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு இறைச்சிக்கடையில் இன்று கெட்டுப்போன 250 கிலோ கோழி இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கெட்டுபோன இறைச்சிகள் இறைச்சிக்கடைகளிலும், ஓட்டல்களில் பறிமுதல் செய்யப்பட்டு வருவது கோழிக்கறியை விரும்பி உண்ணும் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.