நிலநடுக்கத்தால் ஆட்டம் கண்ட ஆப்கானிஸ்தான்!

Filed under: உலகம் |

இன்று அதிகாலை முதல் அடுத்தடுத்து 5 முறை ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது.

துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் கடந்த பிப்ரவரி 6ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்தடுத்த நாட்களில் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததுடன், ஏராளமான உயிர்பலிகளும் ஏற்பட்டன. உலக நாடுகள் பல தங்களது மீட்பு படைகளை அனுப்பி மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதுவரை துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் நிலநடுக்கத்தால் 42 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர். இந்த சோகம் மறைவதற்கு தற்போது அடுத்தடுத்து ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்டு வரும் நிலநடுக்கம் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இன்று அதிகாலை ஆப்கானிஸ்தானின் பாயிசாபாத் அருகே காலை 6.07 மணியளவில் 6.8 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் அதிர்ச்சி மறைவதற்கு மீண்டும் 6.25 மணிக்கு 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. அதற்கு பின் மீண்டும் 7.37 மணியளவில் 4.8 ரிக்டர் அளவில் ஒரு நிலநடுக்கம் என தொடர்ந்து 4 நிலநடுக்கங்கள் பதிவாகின. இதனால் ஏற்பட்ட பாதிப்புகளின் விவரம் வெளியாகவில்லை. அதற்குள் மீண்டும் ஒரு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. காலை 12.15 மணியளவில் பாயிஸாபாத் அருகே பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4 ஆக பதிவாகியுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் பதிவாகி வருவது ஆப்கானிஸ்தானை மட்டுமல்லாமல் அண்டை நாடுகளையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.