டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

Filed under: உலகம் |

டென்னிஸ் விளையாட்டின் சிறந்த வீரர் நோவக் ஜோகோவிக் தான். இவர் உலக அளவில் ஒன் இடத்தில் உள்ளார். நோவிக் செர்பியா நாட்டை சேர்ந்தவர். நோவிக் உலக அளவில் பல போட்டிகளை விளையாடி வெற்றி பெற்று பல சாதனைகளை படைத்துள்ளார். தற்போது இந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் வென்றார்.

தற்போது நோவிக்கிற்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இதனை பற்றி நோவிக் வெளியிட அறிக்கையில் கூறியது: செர்பியா நாட்டின் பெல்கிரேடு நகரில் நுழைந்த உடன் எங்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் முடிவில் எனக்கும் என்னுடைய மனைவி ஜெலினாவுக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு இல்லை.

இதை தொடர்ந்து 14 நாட்களுக்கு நாங்கள் சுய தனிமைப்படுத்தி கொள்வேன். பின்பு ஐந்து நாளுக்கு கொரோனா பரிசோதனை செய்வேன் என தெரிவித்துள்ளார்.