பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

Filed under: சென்னை,தமிழகம் |

பள்ளி கல்வித்துறை ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை தமிழ்நாட்டிலுள்ள அரசு மற்றும் அரசு நிதிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஆசிரியர்கள் பள்ளியில் பணியாற்றும் போது மாணவர்கள் வருகை, ஆசிரியர்கள் வருகை, மற்றும் பள்ளியில் உள்ள பதிவேடுகள் தற்போது கையால் எழுதி வரும் நிலையில் இனி அனைத்தும் கையால் எழுதுவதை தவிர்த்து கணினி மூலம் கண்காணிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்திருந்தது. இந்த செயலி மூலம் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்தவுடன் கணினி மூலம் பதிவு செய்யப்படும் என்றும் அதேபோல் ஆசிரியர்கள் விடுமுறை எடுப்பதற்கும் இந்த செயலியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் தங்கள் செல்போன்களில் இந்த செயலியை டவுன்லோட் செய்து கொண்டு விடுமுறைகளை செயலியில் பதிவு செய்ய வேண்டும் என்றும் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அந்த விடுமுறையை ஒப்புதல் அளிப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது