மார்பளவுக்கு புதைமண்ணில் புதைந்து உயிருக்குப் போராடிய சிறுவனை இளைஞர்கள் மீட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
நெய்வேலி அருகே மண்ணுக்குள் மார்பளவுக்கு புதைந்து உயிருக்குப் போராடிய சிறுவனை இளைஞர்கள் மீட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மங்களத்தில், புதை மண் இருப்பது தெரியாமல் சென்ற ஏழு வயது சிறுவன் ஒருவர் அதில் சிக்கிக் கொண்டார். அவர் கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் புதை மண்ணில் இறங்கி, மண்ணுக்குள் மார்பளவு புதைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்த இளைஞர்கள் 4 பேர், புதை குழியில் உயிருக்குப் போராடிய சிறுவனை லாவகமாக மீட்டனர். இன்னும் சிறிது நேரம் போயிருந்தால் சிறுவனுக்கு அசம்பாவிதம் நடந்திருக்கும் என்ற நிலையில், சிறுவனைக் காப்பாற்றிய இக்காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. மேலும் இளைஞர்களின் செயலுக்குப் பாராட்டுகள் குவிந்துள்ளது.