மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு அவகாசம்!

Filed under: தமிழகம் |

மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகியவற்றுக்கான மாணவர் சேர்க்கைக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் ஆகிய மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்று அதாவது அக்டோபர் 3ம் தேதி கடைசி நாள் என மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்திருந்தது. இன்னும் பல மாணவர்கள் விண்ணப்பம் செய்யாத நிலையில் கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த மருத்துவ கல்வி இயக்குனரகம் தற்போது எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 6ம் தேதி மாலை 5 மணி வரை நீடித்துள்ளது. எனவே இந்த கால அவகாசத்தைப் பயன்படுத்தி எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பிற்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் உடனடியாக விண்ணப்பித்து கொள்ளுமாறு மருத்துவ கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.