வே. மாரீஸ்வரன்
கோயம்புத்தூர் : கொரோனா வைரஸ் தொற்று கோவை மாவட்டத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி ஆட்டிப்படைத்துக் கொண்டு வரும் இந்த நேரத்தில், கொரோனா வைரசால் சுமார் 86 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்துவரும் நிலையில் கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் வசிக்கும் மழை கிராமங்களான சர்க்கார் போரெத்தி, ஜாகிர் போரெத்தி, பச்சன் வயல், சவுக்கு காடு, புதுப்பதி, ஆகிய மலைக்கிராம மலைவாழ் மக்கள் வேலைக்குச் செல்லாமல் வீட்டிற்குள் முடங்கிப்போய் அன்றாட கஞ்சிக்கு அல்லல் பட்டுக் கொண்டு பசி பட்டினியால் தவித்துக் கொண்டு வந்தனர்.மலைக்கிராம மலைவாழ் மக்களின் துயரச்செய்தி இந்துஸ்தான் சாரணர் இயக்கத்தின் தலைமை ஆணையாளர் பிரசாத் உத்தமன் பார்வைக்கு சென்றது. உடனடியாக பசி பட்டினியால் துடித்துக்கொண்டிருந்த மலைக்கிராம மலைவாழ் மக்களுக்கு தேவையான அரிசி பருப்பு காய்கறிகள் போன்றவற்றை சுமார் 6 கிராம மக்களுக்கு நிவாரணமாக வழங்கப்பட்டது அத்துடன் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்களுக்கும் நிவாரணம் வழங்கியதுடன் தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சரியான நேரத்தில் தக்க நடவடிக்கை எடுத்து மலைக்கிராம மலைவாழ் மக்களுக்கு இந்துஸ்தான் சாரணர் சாரணியர் இயக்கத்தின் தலைமை ஆணையாளர் பிரசாத் உத்தமன் நிவாரணம் வழங்கியது கோவை மாவட்டத்தில் உள்ள மலை கிராமங்கள் மலைவாழ் மக்களிடத்தில் வரவேற்பை பெற்றுள்ளது.