பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு இடையே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு OTT தளத்தில் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெளியானது, படத்தில் என்ன கதை இருக்கும் என்று ஒருபுறம் எதிர்பார்ப்புகள் எழுந்தாலும், படத்தின் டீசரில் கிறிஸ்தவ, இந்து பாதிரியார்கள், சாமியார்கள் குறித்து சில காட்சிகள் இடம்பெற்று இருந்த காரணத்தால் ஏதேனும் இந்த திரைப்படம் மத ரீதியிலான சர்ச்சையை உண்டாக்குமா என்ற கோணத்தில் எதிர்ப்புகள் எழுந்தன.
இந்நிலையில் இன்று வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் மிக பெரிய சர்ச்சையை உண்டாக்கியுள்ளது, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பல தமிழ் திரைப்படங்களில் இந்து கடவுள்கள், நம்பிக்கை ஆகியவற்றை இழிவு படுத்தும் நடவடிக்கைகள் இருந்தன ஆனால் அதன் பிறகு தமிழகத்தில் இந்து அமைப்புகளின் எழுச்சியை தொடர்ந்து இந்து கடவுள்களை இழிவு படுத்தும் திரைப்படங்களை மக்கள் புறக்கணித்தனர்.
குறிப்பாக சமுத்திரக்கனி இந்து கடவுள்கள் குறித்து பெரியாரை உயர்த்தி கூறிய திரைப்படம் படு தோல்வி அடைந்தது, இந்த நிலையில் மீண்டும் மூக்குத்தி அம்மன் திரைப்படம் இந்து நம்பிக்கைகளை பல இடங்களில் இழிவுபடுத்தும் விதத்தில் அமைந்துள்ளதாக அதிரைப்படத்தை பார்த்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதை விட மிக முக்கியமாக மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் மனோ பாலா போலி பாதிரியார் போன்று CD ஒன்றை வைத்து அனைத்து நோய்களை குணப்படுத்துவது போன்று காட்சி ஒன்றிருந்தது, இது குறித்த வீடியோவும் வெளியானது, ஆனால் நேற்று இரவோடு இரவாக திரைப்படத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்தை விமர்சனம் செய்யும் பல காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.
சில காட்சிகள் நீக்கப்பட்ட நிலையில் ஏன் அந்த காட்சிகள் நீக்கப்பட்டது இதற்கு காரணம் என்ன என்பது போன்ற பல விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகின்றன.