யாருக்கெல்லாம் நிவாரணத்தொகை ரூ.6000?

Filed under: சென்னை |

சமீபத்தில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் பெரும் சேதத்திற்கு தள்ளப்பட்டது.

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரணம் வழங்குவது தொடர்பாக அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, மாவட்டத்தில தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்களில் வசிக்கும் அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும். திருவள்ளூர் மாவட்டத்தில் 6 வட்டங்களில் அதாவது பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூந்தமல்லி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் ஆகிய வட்டங்களுக்கு நிவாரணம் வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயலால் 2 நாட்களுக்கும் மேலாக வெள்ளம் சூழ்ந்து துணி, பாத்திரம் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை இழந்தவர்களுக்கு ரூ.6000 வழங்கப்படும். மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர் பாதிப்பு விபரங்களை வங்கி கணக்கு விவரத்துடன் ரேசன் கடைகளில் விண்ணப்பிக்கலாம். காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் 3 கிராமங்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்குவதாக அரசு தெரிவித்துள்ளது. வருமானவரி செலுத்துவோர், சர்க்கரை கார்டு வைத்திருப்போர் தங்களுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து விளக்கமளித்தும் பெற்றுக் கொள்ளலாம். 2 நாட்களுக்கு மேல் மழை வெள்ளம் சூழ்ந்த குடும்பங்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் டோக்கன் விநியோகிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.