ரக்ஷாபந்தன் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், குடியரசு துணைத் தலைவர் எம் வெங்கையா நாயுடு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள செய்தியில் தெரிவித்திருப்பதாவது:
“ரக்ஷாபந்தன் என்ற புனித தருணத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது சமூகத்தில் சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு இடையேயான அன்பு மற்றும் பாசத்தின் வலுவான பிணைப்பை ரக்ஷாபந்தன் பண்டிகை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. ஒரு சகோதரர் மற்றும் ஒரு சகோதரிக்கு இடையேயான உறவு மிகவும் சிறப்பு வாய்ந்தது. அன்பு, பரஸ்பர மரியாதை மற்றும் கருணையில் அமைந்துள்ள இந்த தனித்துவம் வாய்ந்த பந்தத்தை ரக்ஷாபந்தன் கௌரவிக்கிறது.
நமது சமூகத்தில் பெண்களுக்கு பாரம்பரியமாக அளிக்கப்படும் உயர்ந்த நிலையையும் இந்த திருநாள் நமக்கு நினைவூட்டுகிறது. இந்தத் தருணத்தில் நம் நாட்டில் உள்ள பெண்களின் கண்ணியத்தை நிலைநிறுத்தவும், அவர்களுக்கு மரியாதை செலுத்தவும் நம்மை நாமே மீண்டும் அர்ப்பணித்துக் கொள்வோம்.
ரக்ஷாபந்தன் என்ற புனித திருநாளன்று நம் நாட்டு குடிமக்களுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.”