இன்று தமிழ்நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவங்கி வைத்தார்!

Filed under: தமிழகம் |

மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் மூலம் இந்தியாவில் எந்த மாநிலத்தில் வசித்து வந்தாலும், மூலை முடுக்கில் இருந்தாலும், அங்கிருக்கும் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி கொள்ளலாம்.

இந்தத் திட்டத்தின் செயல்முறைகள் தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டத்தில் நடைபெற்று 32 மாவட்டங்களில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதுதவிர தூத்துக்குடி, தஞ்சாவூர், விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் வரும் 15ஆம் தேதி முதல் இந்த திட்டம் அமலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமைச் செயலகத்திலிருந்து இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் ராஜூ, உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.