ரஜினிகாந்த் நடிகை மீனாவின் கணவர் உடலுக்கு அஞ்சலி!

Filed under: சென்னை |

நேற்று நுரையீரல் கோளாறு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் காலமானார். அவரது உடலுக்கு ரஜினிகாந்த் மரியாதை செலுத்தியுள்ளார்.

கடந்த சில நாட்களாகவே நுரையீரல் கோளாறு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர். அவருக்கு மாற்று நுரையீரல் பொருத்த மருத்துவர்கள் முயற்சித்துள்ளனர். நுரையீரல் தானம் கிடைக்கவில்லை என்ற காரணத்தினால் அறுவை சிகிச்சை செய்ய தாமதமாகி உள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் அவதிப்பட்ட வித்யாசாகர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 7 மணிக்கு காலமானார். இதையடுத்து அவருடைய உடல் அவருடைய இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. சற்றுமுன் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடலுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.