ரஜினி மகளான சொந்தர்யா வீட்டில் திருடியவரிடமிருந்து ஒரு கோடி ரூபாய்க்கான சொத்து ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் 60 சவரன் நகை உள்பட ஆபரணங்கள் திருட்டு போனது. இந்நிலையில் இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்த போது ரஜினி மகள் வீட்டில் வேலை செய்த ஈஸ்வரி என்பவர்தான் நகைகளை திருடியுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரது வங்கி கணக்கை ஆய்வு செய்தபோது கோடிக்கணக்கில் வரவு செலவு செய்யப்பட்டதும் தெரியவந்தது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடிய பணத்தில் ஈஸ்வரி சோளிங்கநல்லூரில் சொகுசு வீடு ஒன்று வாங்கியதும் அம்பலமாகியுள்ளது. இதையடுத்து திருடியவரிடமிருந்து ரூபாய் ஒரு கோடி சொத்து ஆவணங்கள் மீட்கப்பட்டதாகவும் காவல்துறையினரிடம் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. மேலும் திருட்டு வழக்கில் ஈஸ்வரி வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்றும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.