சென்னை உயர்நீதிமன்றம் எழும்பூர் ரயில் நிலைய விரிவாக்க பணிகளுக்காக மரங்கள் வெட்டப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில மாதங்களாக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை நவீன முறையில் விரிவுபடுத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளின் போது மரங்கள் வெட்டப்படுவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பசுமைத்தாயகம் என்ற அமைப்பு முறையீடு செய்துள்ளது. மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கபூர்வாலாஅடங்கிய அமர்வு அவசர வழக்காக விசாரிக்க அனுமதி அளித்துள்ளது. மரங்கள் வெட்டப்படுவதை கைவிட கோரி மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பசுமைத்தாயகம் அமைப்பு குற்றம் சாட்டி உள்ளது,