ஆப்கானிஸ்தான் நாட்டின் ரஷ்ய தூதரகத்தில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இன்று வழக்கம்போல ரஷ்ய தூதரகம் செயல்பட தொடங்கிய நிலையில் பலரும் விசா பெற விண்ணப்பிக்க வந்துள்ளனர். அப்போது தூதரகம் அருகே பயங்கரவாதி ஒருவன் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில், குண்டு வெடித்து பலரும் சிதறி விழுந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக காயமடைந்தவர்கள் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த தற்கொலைப்படை தாக்குதலில் ரஷ்ய தூதரக அதிகாரி 2 பேர் உட்பட 20 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். இந்த விபத்து சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அதேசமயத்தில் ஆப்கானிஸ்தானுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே புதிய பிரச்சினைகள் உருவாகும் என்று கூறப்படுகிறது.