ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கியஅறிவிப்பு டிசம்பர் 20 கடைசி தேதி!!!

Filed under: தமிழகம் |

சர்க்கரை ரேஷன் அட்டைகளை, அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்ற வரும் 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


இதுகுறித்து உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” பொது விநியோக திட்டத்தில் தற்போது 5,80,298 குடும்ப அட்டைகள் சர்க்கரை குடும்ப அட்டைகளாக உள்ளன. இதில் பெரும்பாலானோர் தங்கள் குடும்ப அட்டைகளை, அரிசி பெறக்கூடிய குடும்ப அட்டைகளாக மாற்றித் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.அதனை ஏற்று, தமிழக முதல்வர் கீழ்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள், தங்கள் குடும்ப அட்டைகளை தகுதியின் அடிப்படையில், அரிசி குடும்ப அட்டைகளாக மாற்ற விரும்பினால், அதற்கான விண்ணப்பங்களை தங்களது குடும்ப அட்டையின் நகலினை இணைத்து, இன்று 05.12.2020 முதல் 20.05.2020 வரை, என்ற இணையதள முகவரியிலும், சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் துறை அலுவலர்கள் அல்லது உதவி ஆணையர்களிடமும் சமர்ப்பிக்கலாம்.. அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள், உடனடியாக பரிசீலனை செய்யப்பட்டு, சர்க்கரை குடும்ப அட்டைகள், அரிசி குடும்ப அட்டைகளாக மாறுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.