மீன்வளத்துறையின் வளர்ச்சிக்காக மத்ஸ்ய சம்பட யோஜ்னா திட்டத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதில் ஐந்து வருடத்துக்கு 20 ஆயிரத்து 50 கோடி ரூபாய் முதலீட்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இதை அடுத்து பிரதமரின் கால்நடை விற்பனை செய்வதற்கு இ-கோபாலா என்கிற செயலையும் துவங்கி வைத்தார்.
அப்போது காணொளி காட்சி மூலம் பேசிய பிரதமர் மோடி, மீன்வளத் துறையில் ஒரு முக்கிய பிரச்சினைகளை தீர்க்கவும் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கவும் இந்த திட்டம் உதவியாக இருக்கும் என தெரிவித்தார்.
மீன்வளத் துறையில் ஈடுபடுபவர்களின் நலனுக்காகவும் முக்கிய கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காகவும் இந்த திட்டம் உதவியாக இருக்கும் என தெரிவித்தார்.
மேலும், கால்நடை விற்பனை, இனப்பெருக்கம், ஆகியவற்றுக்கு உதவியாக இருக்க இ-கோபால செயலியை துவங்கி வைத்தார்.