மார்ச் 22ம் தேதி 2024ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூர் அணி மோத உள்ளது. சென்னையில் நடைபெறும் இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இம்முறை ஆன்லைனில் தான் முழுக்க முழுக்க டிக்கெட் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்திருந்தனர். கண்டிப்பாக அனைவருக்கும் டிக்கெட் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இன்று காலை 9.30 மணிக்கு ஆன்லைன் டிக்கெட் விற்பனை தொடங்கியது. ஒரு சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டது. இதையடுத்து ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இப்போட்டிக்கான குறைந்தபட்ச டிக்கெட் 1700 ரூபாய் என்றும் அதிகபட்சமாக 7500 என்று நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது என்பதும் ஆன்லைனில் வாங்கினாலும் ஒரு நபர் இரண்டு டிக்கெட்டுகள் மட்டுமே வாங்க முடியும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.